இளைஞர்கள் விளையாடுவதை நிறுத்தினால் சிக்கல்.. அதனால்தான் பப்ஜியை மோடி தடை செய்யவில்லை.. காங்கிரஸ்

இளைஞர்கள் விளையாடுவதை நிறுத்தினால் சிக்கல்.. அதனால்தான் பப்ஜியை மோடி தடை செய்யவில்லை.. காங்கிரஸ்

கடந்த சில மாதங்களாக எல்லையில் குடைச்சல் கொடுத்து வந்த சீனாவுக்கு பாடம் புகட்டும் நோக்கில், இந்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய வந்த சீன செயலி நிறுவனங்களுக்கு பெரிய அடி விழுந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், கடந்த ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகளின் குளோன்களாக இருந்த 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை போட்டது.

இளைஞர்கள் விளையாடுவதை நிறுத்தினால் சிக்கல்.. அதனால்தான் பப்ஜியை மோடி தடை செய்யவில்லை.. காங்கிரஸ்

மேலும், 275 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரத்திலும் பிரதமர் மோடி அரசை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான உள்ளது ஆன்லைன் விளையாட்டான பப்ஜியை தடை செய்தால், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இளைஞர்கள் கேள்வி கேட்பர் என்பதை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார் என காங்கிரஸ் அபிஷேக் மனு சிங்வி கிண்டல் செய்துள்ளார்.

இளைஞர்கள் விளையாடுவதை நிறுத்தினால் சிக்கல்.. அதனால்தான் பப்ஜியை மோடி தடை செய்யவில்லை.. காங்கிரஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் செய்திதொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி டிவிட்டரில், மோடிஜி உண்மையில் பப்ஜியை தடை செய்ய விரும்பினார். ஆனால் இளைஞர்களுக்கு கற்பனை உலகின் கவனச்சிதறல்கள் இல்லையென்றால், அவர்கள் வேலை வாய்ப்பு போன்ற உண்மையான உலக விஷயங்களை கேட்பார்கள். அது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்பதை மோடி உணர்ந்தார் என பதிவு செய்துள்ளார்.