தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தல்!

 

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தல்!

மதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சமீப காலமாக பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் செயல்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் தேசியக் கொடி ஏற்ற விடாமல் அவமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் தெற்குத் திட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, பொதுக்கூட்டத்தின் போது தரையில் அமர வைத்து இழிவு படுத்தப்பட்டார். இவ்வாறு பட்டியலின மக்கள் மீதான அவமதிப்பு தொடர்கதையாகி வருகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தல்!

இந்த நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டான்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷ் என்பவர் கடத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அவரை, ஊராட்சி மன்றத் துணை தலைவர் பிரதீப் என்பவர் கடத்தி விட்டதாகவும் பிரதீப் தனது சகோதரிக்கு ஊராட்சி செயலாளர் பதவி பெற்றுத் தரும் விவகாரத்தில் கடத்தப்பட்டு விட்டதாகவும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.