• April
    04
    Saturday

Main Area

Main



Michael Nancy Madonnaவின் சுருக்கம்தான் கமலின் MNM - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

சென்னை, வேலூர், திருச்சி மாதிரி பெரிய ஊர்களில் அடிக்கும் வெயிலை விடவும் சிவகங்கை மாதிரியான சின்ன ஊர்களில் அடிக்கும் வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமா இருக்கும். ஆதாரம் கேட்டீங்கன்னா இன்னிக்கி எச் ராஜா கொடுத்த பேட்டியை பாருங்க புரியும் - மூளை குழம்பி புத்தி பேதலிக்க அளவுக்கு சிவகங்கை பக்கம் வெயில் அடிக்குதுண்ணு.

h.raja

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மைக்கேல் அப்படிங்கிற பெயரை முதலில் வைத்து தான் ஒரு கிறிஸ்தவர் அப்படிங்கறத பல வருடங்களுக்கு முன்பாகவே கமல் நிருபித்து உள்ளார்னு யாராச்சும் சொன்னா, ஏதோ கீழ்ப்பாக்கம் கேசுன்னு தானே தோணும்?

இந்தக் கோணத்துக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு ஆங்கில்ல யோசிச்சு எச் ராஜா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். சாப்பிடும்போது யாரும் இந்தப் பேட்டியை பார்த்துடாதீங்க புரையேறி உசுருக்கு சேதாரம் ஆகிடும். இரண்டரை மணி நேரம் எடுத்துகிட்டு சிரிப்பு வரவைக்க முடியாம காமெடி ட்ராக் வைக்கிற சினிமாக்காரங்க மத்தியில, வெறும் 2 நிமிஷத்துல non stop entertainment தர்ற எச். ராஜா சார் சினிமாவுக்கு வந்தா, காமெடி டிராக் எழுதி எங்கேயோ போயிடலாம்

2018 TopTamilNews. All rights reserved.