‘போராடி உரிமையை மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்’ பாதுகாப்புக் கோரி மனு!

 

‘போராடி உரிமையை மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்’ பாதுகாப்புக் கோரி மனு!

பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான அமிர்தம், பாதுகாப்பு கோரி மனு அளித்திருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் ஆத்துப்பாக்கம் ஊராட்சியின் தலைவர் அமிர்தம். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், விழாக்களின் போது தேசியக் கொடியை ஏற்ற மறுப்பு தெரிவிப்பதாகவும் அவமானப்படுத்தப்படுவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். மேலும், அவரை இருக்கையில் அமரக்கூடாது என்றும் கணக்கு வழக்குகளை பார்க்க கூடாது என்றும் ஊராட்சி மன்றத் துணை தலைவர் கூறியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

‘போராடி உரிமையை மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்’ பாதுகாப்புக் கோரி மனு!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மனித உரிமை ஆணையம் இதனை தாமாக முன்வந்து விசாரித்தது. பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியரின் ஆதரவுடன் தனது உரிமையை மீட்டெடுத்தார் அமிர்தம்.

இந்த நிலையில், பாதுகாப்பு கோரி அமிர்தம் மனு அளித்துள்ளார். பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.