ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை- மத்திய அரசு பல்ட்டி

 

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை- மத்திய அரசு பல்ட்டி

இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களுக்கு தானே கொரோனா வைரஸ் இருக்கிறதா.. அல்லது அறிகுறி இருக்கிறதா என்பதை அறிந்துக் கொள்ள ஆரோக்கிய சேது செயலியை கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கியது.இதனை மத்திய,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் கட்டாயமாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பலக்கோடிக்கணக்கானோர் இதனை தரவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா இருக்கும் இடங்கள், அதிகம் நோய்ப்பரவும் இடங்கள், கொரோனா அறிகுறி உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி மூலம் அறிந்துகொள்ளலாம்.

ttn

இதற்கிடையில் விமானத்தில் பயணிப்பவர்கள் கொரோனா பரிசோதனைக்காக பயணிகள் ஆரோக்கிய சேது மொபைல் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கிய சேது ஆப் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. விமானம், ரயில் பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என்று முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது.