தேவர் திருநீறை கீழே கொட்டினாரா ஸ்டாலின்? ஆப்பநாடு மறவர் சங்கம் விளக்கம்!

தேவர் திருநீறை கீழே கொட்டினாரா ஸ்டாலின்? ஆப்பநாடு மறவர் சங்கம் விளக்கம்!

தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் திருநீறை கீழே கொட்டியதாக ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்தது போல பொய் பிரச்சாரம் செய்தவர்களுக்கு ஆப்பநாடு மறவர் சங்கம் தலைவர் முனியசாமித்தேவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேவர் திருநீறை கீழே கொட்டினாரா ஸ்டாலின்? ஆப்பநாடு மறவர் சங்கம் விளக்கம்!

ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் கடந்த 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113 வது ஜெயந்தி விழா மற்றும் 58 வது ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த பூசாரி ஸ்டாலினுக்கு திருநீறு வழங்கினார். இதை அவர் தனது கழுத்தில் பூசிக்கொண்டு மீதம் இருந்ததை கைகளில் பூசிக்கொண்டார்.

தேவர் திருநீறை கீழே கொட்டினாரா ஸ்டாலின்? ஆப்பநாடு மறவர் சங்கம் விளக்கம்!

இதை சிலர் தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினர். தேவர் நினைவிடத்தில் கொடுத்த திருநீறை கீழே கொட்டி விட்டதாக கூறியதுடன் , ஆப்ப நாடு மறவர் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்தது போல அறிக்கை ஒன்றும் வெளியானது.

தேவர் திருநீறை கீழே கொட்டினாரா ஸ்டாலின்? ஆப்பநாடு மறவர் சங்கம் விளக்கம்!

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு ஆப்ப நாடு மறவர் சங்கத்தலைவர் ஆர்.முனியசாமித்தேவர் கண்டனம் தெரிவித்துள்ளர். இடுகுறித்து அவர் பேசும் போது, பசும்பான் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். தேவர் நினைவிடத்தில் திருநீறு விவகாரத்தில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்தது போல பரவிய தகவல்கள் பொய்யானது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவர் திருநீறை கீழே கொட்டினாரா ஸ்டாலின்? ஆப்பநாடு மறவர் சங்கம் விளக்கம்!

காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கஷ்டப்பட்டோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் தோளில் துண்டு போட்டு சென்றோம். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கோரிப்பாளையத்தில் தேவருக்கு பிரமாண்ட சிலை அமைத்தார். பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டினார். இப்படி இருக்கும் போது திமுக குடும்பம் எப்படி தேவருக்கு அவமரியாததை செய்ய முடியும் ?என்று அவர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.