உத்தர பிரதேசத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களை அனுப்பும் ஆம் ஆத்மி… தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தும் கெஜ்ரிவால்

உத்தர பிரதேசத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களை அனுப்பும் ஆம் ஆத்மி… தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தும் கெஜ்ரிவால்

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து, தேர்தல் பணிகளை தொடங்குவதற்காக 40 எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்சி அம்மாநிலத்துக்கு அனுப்ப உள்ளது.

உத்தர பிரதேசத்தில் 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இந்நிலையில் கடந்த டிசம்பரில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மனிஷ் சிசோடியா, எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார்.

உத்தர பிரதேசத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களை அனுப்பும் ஆம் ஆத்மி… தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தும் கெஜ்ரிவால்
மனிஷ் சிசோடியா

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அதற்கான பணிகளை ஆம் ஆத்மி மேற்கொள்ள தொடங்கியது. தற்போது உத்தர பிரதேசத்தில் தேர்தல் பணிகளை தொடங்குவதற்காக தனது 40 எம்.எல்.ஏ.க்களை அங்கு அனுப்ப ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேச தொண்டர்களிடம் டெல்லியின் வளர்ச்சி மாதிரி எடுத்து பேசுங்கள், அதன் மூலம் ஆம் ஆத்மியில் அதிகம் பேர் இணைவார்கள் என்று தனது எம்.எல்.ஏ.க்களிடம் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளதாக தகவல்.

உத்தர பிரதேசத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களை அனுப்பும் ஆம் ஆத்மி… தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தும் கெஜ்ரிவால்
வைபவ் மகேஸ்வரி

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி கூறியதாவது: 40 எம்.எல்.ஏ.க்களுக்கு பல தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளை பார்வையிடவும், உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும், அங்கு கட்சியின் பலங்கள் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்யும்படி எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது பணிகளை முடித்த பின் கட்சி தலைமைக்கு தங்களது பதிலே அளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.