ஷாஹீன் பாக் போராட்டம் பா.ஜ.க.வால் திரைக்கதை செய்யப்பட்டது… ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு..

 

ஷாஹீன் பாக் போராட்டம் பா.ஜ.க.வால் திரைக்கதை செய்யப்பட்டது… ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு..

டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் லாக்டவுன் அமல்படுத்திய ஒரு சில நாட்கள் வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல், லாக்டவுன் காரணமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சூழ்நிலையில்,நேற்று முன்தினம் டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா மற்றும் ஷ்யாம் ஜாஜூ ஆகியோர் முன்னிலையில் ஷாஹீன் பாக் சமூக ஆர்வலர் ஷாசாத் அலி மற்றும் பலர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு முழு ஷாஹீன் பாக் போராட்டமும் பா.ஜ.க.வால் திரைக்கதை செய்யப்பட்டது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

ஷாஹீன் பாக் போராட்டம் பா.ஜ.க.வால் திரைக்கதை செய்யப்பட்டது… ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு..

ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் இது குறித்து டிவிட்டரில், முழு ஷாஹீன் பாக் போராட்டமும் பா.ஜ.க.வால் திரைக்கதை செய்யப்பட்டது. பா.ஜ.க.வின் தலைசிறந்த தலைமை இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒவ்வொரு அடியையும் திரைக்கதை செய்தது. யார் என்ன பேசுவார்கள், யார் யாரை தாக்குவார்கள், யார் பதில் தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர்கள் முடிவு செய்தனர். இந்த விஷயங்கள் அனைத்தும் முன்திட்டமிடப்பட்டவை மற்றும் நன்கு எழுதப்பட்டவை என பதிவு செய்து இருந்தார்.

ஷாஹீன் பாக் போராட்டம் பா.ஜ.க.வால் திரைக்கதை செய்யப்பட்டது… ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு..

ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் மனோஜ் திவாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், இப்போது குழப்பம் நீங்கியது, முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பா.ஜ.க.வுடன் பயணிக்க விரும்புகின்றனர். பிரிப்பதை நிறுத்துங்க அரவிந்த் கெஜ்ரிவால் ஜி. உலகின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க. அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும், மதம், சாதி, அல்லது பரம்பரை அடிப்படையில் பாகுபாடு காட்டாது.