‘தோனி அப்படி என்னதான் செய்தார்? முன்னாள் வீரரின் காட்டமான அட்டாக்

 

‘தோனி அப்படி என்னதான் செய்தார்? முன்னாள் வீரரின் காட்டமான அட்டாக்

சில நாட்களுக்கு முன், ICC யின் தசாப்த அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது. உலகமே அதைப் பார்த்து வியந்தது. ஐசிசி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோரும் இந்திய வீரர்களே. மேலும், டேவிட் வார்னர், டி வில்லியர்ஸ், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், மிட்ச்செல் ஸ்டார்க், போல்ட், இம்ரான் தாஹீர், மலிங்கா ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.

ஐசிசி டி20 போட்டி அணியின் கேப்டன் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரஷித் கான், பும்ரா ஆகியோரும் இந்திய வீரர்களே. மேலும், கிறிஸ் கெயில், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பொல்லார்டு, மலிங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

‘தோனி அப்படி என்னதான் செய்தார்? முன்னாள் வீரரின் காட்டமான அட்டாக்

இரண்டிலும் தோனி இடம்பெற்றது இந்திய ரசிகர்களுக்கு அதிலும் தோனியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்தது. ஏனெனில், ஆகஸ்ட் 15-ம் தேதி தோனி தனது ஓய்வை அறிவித்தார். பலரும் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒரே ஒரு முன்னாள் வீரர் தோனி மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

‘தோனி அப்படி என்னதான் செய்தார்? முன்னாள் வீரரின் காட்டமான அட்டாக்

சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “கடந்த பத்தாண்டுகளில் தோனி என்ன செய்துவிட்டார். அவர் பெயர் டி20 அணியின் கேப்டனாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இந்த பத்தாண்டுகளில் தோனி ஒரு கோப்பையைக் கூட இந்திய அணிக்காக பெற்றுத்தர வில்லை. தனது ஆட்டத்திலும் சிறப்பாக ஆட வில்லை. இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் போன்றோர்களை ஏன் இந்த அணியில் சேர்க்க வில்லை” என்று விமர்சனத்தை எழுப்பியிருக்கிறார்.

ஆகாஷ் சோப்ராவின் இந்த விமர்சனத்திற்கு தோனியின் ரசிகர்கள் வெகுண்டு எழுந்து கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். யார் இந்த ஆகாஷ் சேப்ரா… இந்திய அணிக்காக என்ன சாதனை செய்தார் என்றும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்..