ஆடிப்பெருக்கு: வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம்!

 

ஆடிப்பெருக்கு:  வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம்!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18-ஆம் நாளைக் குறிக்கும். இந்த நாளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி வரும். அப்போது மக்கள் ஆறுகளில் புனித நீராடுவார்கள். விவசாயிகள் தங்கள் உழவுத் தொழில் சிறப்பாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி கொள்வர்.

ஆடிப்பெருக்கு:  வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம்!

அத்துடன் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் மக்கள் வழிபாடு செய்வர். அதனால்தான் கரையோரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தப் படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த முறை கூடகொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு திருவிழா தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு:  வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம்!

வீடுகளில் விதவிதமாக பலகாரங்களை சுமைத்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு காவிரி ,வைகை, தாமிரபரணி ஆறுகளை மனதில் வணங்கி ஆடி பதினெட்டாம் நாள் விழாவே கொண்டாடலாம். புதுமண தம்பதிகள் புது மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். அத்துடன் சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன் மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்று நம்பிக்கை உள்ளது. அத்துடன் திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் கன்னி பெண்கள் திருமணமாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்வர்.