நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

 

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

அகஸ்திய முனிவரின் கமண்டலத்தில் அடைபட்டு கிடந்த காவிரி அன்னையை, நாரதரின் ஆலோசனைப்படி விநாயகர் காக்கை ரூபத்தில் சென்று கவிழ்த்து விட, நடந்தாய் வாழி காவேரி … நாடெங்குமே செழிக்க … நன்மை எல்லாம் நடக்க… நடந்தாய் வாழி காவேரி … என்று தமிழகத்தில் பாய்ந்து ஓடி தஞ்சை தாரணியை நெற்களஞ்சியமாக்கி வளங்கொழிக்க செய்கிறாள் காவிரி தாய். காவிரிக்கு பொன்னி நதி என்றும் ஓரு பெயர் உண்டு. காரணம் நீர் பொன்போல் மின்னுவதால் மட்டுமல்ல, தான் பாயும் பகுதியை எல்லாம் பொன் கொழிக்கும் பூமியாய் செய்வதாலும் தான். காவிரி டெல்டா மக்கள் காவிரி வெறும் நதியாக நினைப்பதில்லை தெய்வமாகவே மதித்து போற்றுகின்றனர். அந்த தெய்வ வழிபாட்டுக்கு வகுக்கப்பட்ட திருநாள் தான் ஆடி 18 – ல் ஆடிப்பெருக்கு. இவ்வாண்டு ஆடிபெருக்கு 02.08.2020 அன்று வருகிறது.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

‘காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்கண்டதோர் வையை பொருனை நதி – எனமேவிய யாறு பலவோடத் – திருமேனி செழித்த தமிழ்நாடு’

என்று பாடுவார் மகாகவி பாரதி.

நாட்டை செழிக்க வைக்கும் நதி பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் விழாதான் ஆடிப்பெருக்கு. ஆற்றை, தண்ணீரை, வருணபகாவனை கொண்டாட, நன்றி சொல்ல, வழிபட, வணங்க எடுக்கும் விழா. அதனை ஆடி 18 – ல் கொண்டாடுவது வழக்கம் . தமிழர்களின் கலாச்சார விழாக்களில் ஆடிப்பெருக்கும் ஒன்று. முக்கியமாக நதிக்கரையோற மக்கள் ஆடிப்பெருக்கை ஊற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

சூரியனின் தென்திசைப் பயணத்தை, ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று கூறுவர். தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குகிறார்கள் . விவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் நன்றியுடன் வழிபட்டனர். அதற்கான நாளாக ஆடி 18- ஐ தேர்ந்தெடுத்தனர். விழாவிற்கு ‘ஆடிப் பெருக்கு’ என்று பெயரிட்டனர்.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

காவிரி கரையோற மக்கள், பெருக்கெடுத்த வரும் அன்னை வரவேற்று வழிபடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காவிரி நதிபாயும் பகுதிகளில் உள்ள மக்கள் ஆடி 18ல் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்று நம்புகின்றனர். காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபாடு செய்ய அதிகாலையிலேயே மக்கள் காவிரி கரையில் திரள்கின்றனர். மஞ்சள், குங்குமம், மலர், பழங்கள், நைவேத்தியங்களுடன், வஸ்திரம் கண்ணாடி ஆகியவற்றுடன் காவிரித்தாயை வழிபட, தங்கள் நன்றியை சமர்ப்பிக்க காவிரி கரை படித்துறையில் கூடுகின்றனர். காவிரித்தாயை வழிபட்டு அதன் கரையில் நின்று புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்கள்.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

தென்னிந்தியாவின் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதி காலையில் திறக்கப்படுகிறது. மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். காவிரியம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி காப்பரிசி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை, பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆடி 18 அன்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு தீர்த்தவாரியுடன் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன . மாலையில் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் இருந்து புடவை, மாங்கல்யம், வெற்றிலை-பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானை மேல் வைத்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் எடுத்து வந்து பெருமாள் முன் வைத்து அந்த சீர்வரிசைகளை ஆராதனைகள பின் அவற்றை காவிரி அன்னைக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரியை ரங்கநாதர் தன் தங்கையாக கருதி சீர்வரிசை அளிக்கும் இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

ராமபிரான் இலங்கையில் அசுரர்களை வதம் செய்து கொன்ற பாவம் நீங்க, குலகுரு வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, ‘தட்சிண கங்கை’ என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன்னுடைய பாவங்கள் நீங்கும்” என்றார் வசிஷ்டர் . அதன்படி ராம பிரான் காவிரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று புராணக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

அட்சய திரிதி போல் ஆடிப்பெருக்கு நன்னாளும் நகை வாங்க சிறப்பானது . இந்த நாளில் நகைகள், பொருட்களும் வாங்கினால் அது பன்மடங்கு பெருகும் . நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர்கள். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்க பலரும் தயங்குவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு தினம் விதிவிலக்காகும். அன்று தொழில் தொடங்கினால் செழிக்கும்.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

ஆற்றங்கரைகளில் மட்டுமல்ல. ஏரி , குளம், திருக்கோயில் குளங்களின் கரைகளிலும் ஆடி 18 – ஐ மக்கள் கொண்டாடுகின்றனர். வீடுகளில் கிணற்று அருகிலும் கூட ஊற்றுநீரையும் ஆற்றுநீராக பாவித்து வருணபகவானை வழிபடலாம்.

ஆடிப்பெருக்கு வழிபட்டை வீட்டிலும் கூட செய்யலாம். ஒரு செம்பில் நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரைக்க. அந் நீரை, விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

நதி நீராடினால் சகல பாவங்களும் நீங்கும்… ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்பு!

ஆடி பெருக்கு அன்று டெல்டா மாவட்ட சிறுவர்கள் சிறுதேர் செய்து விளையாடுவார்கள். மாலை அதில் தீபமேற்றி வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவது வழக்கம் . மாலையிலும் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி காவிரியை போற்றி பாடல்பாடி வழிபடுவதுடன் நீரில் தொன்னை வாழைபட்டைகளில் தீபங்கள் ஏற்றி மிதக்க விடுவதுண்டு.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வார்த்தை. உலகு மட்டுமல்ல உடலும் கூட நீராய் ஓடும் ரத்தம் இன்றி அமையாது. ஆக தண்ணீரே வாழ்வின் பிரதானம். அதனை ஆடி 18 – ல் போற்றி மதித்து வணங்கி வழிபட்டு வளமும் நலமும் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.