காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

 

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

இன்று ஆடிப்பெருக்கு. பெருக்கெடுத்து ஓடி வரும் நதி தாயை சேயாய் நின்று பொதுமக்கள், விவசாயிகள் வரவேற்று வழிபடும் நாள். இந்நாளில் தமிழகத்தை வளமாக்கும் நதிகளில் ஒன்றான காவிரி அன்னை பற்றி அறிந்துணர்ந்து வணங்கி வழிபடுவோம்.

 

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

கர்நாடக மாநிலம் குடகு மலையில் காவிரி உற்பத்தியாகும் இடம் தலைகாவிரி என்றழைக்கப்படுகிறது. காவிரியை ஸ்ரீ கவரம்மா தேவி என அழைத்து குல தெய்வமாக வணங்குகிறார்கள் கொடவர்கள் சமூக மக்கள். காவிரியின் பிறந்த நாளாக கருதப்படும் அக்டோபர் மாதம் அதாவது தமிழ் மாதங்களில் துலாம் மாதம் எனப்படும் ஐப்பசி முதல்நாள் துல சங்காமன திருநாள் தலைகாவிரியில் குடகு மக்களால் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தலைகாவிரி தலத்தில் அழகிய திருக்கோயிலும் உண்டு அங்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர், அகத்திய மாமுனிவர் சன்னதிகளும் உள்ளன. குடகில் பிறந்து தமிழகத்தில் நுழைந்து வளம் கொழிக்க செய்யும் காவிரித்தாயை ஆடிப்பெருக்கு திருநாளில் வணங்கி போற்றிடுவோம்.

 

பாயும் இடமெல்லாம் வளம் சேர்க்கிறது காவிரி ஆறு . நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், அதற்கு பொன்னி நதி என்றும் ஒரு பெயர் உண்டு. அதோடு மண்ணைப் பொன் கொழிக்கச் செய்வதாலும் காவிரியை பொன்னி ஆறு என கொண்டாடுகின்றனர்.

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

காவிரி உற்பத்தியாகும் குடகு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் உள்ளது. அங்கு தலைக்காவிரி யில் புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ. ஓடிவந்து தமிழ்நாட்டில் நுழையும் காவிரி , 416 கி.மீ. பயணித்து காவிரிபூம்பட்டிணம் என்றழைக்கப்பட்ட பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. யும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

காவிரி பொதுவாக தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடுகிறது. அது பாயும் நில அமைப்பு முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது.

காவிரி கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு , சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகவும் பாய்கிறது.

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

தமிழகத்தில் நுழையும் முன் கர்நாடகத்தில் ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி பாய்ந்து வருகிறத. இங்கு அது ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது.

மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் . ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து அங்கிருந்து தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

 

மேட்டூரிலிருந்து புறப்பட்டுவரும் காவிரியுடன் பவானி ஆறு சேர்கிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின் பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என பெயர். பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. பின் கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர்.

2000 ஆண்டுகளுக்கு முன் கட்டுக்கடங்கா காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கட்டிய கல்லணை. மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை என்ற சிறப்புக்குரியது.

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்.

காவிரித்தாயை போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு திருநாள் சிறப்பு!

கர்நாடகா உடனான பிரச்னைகளால் தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவில் சிக்கல்கள் இருந்தாலும் காவிரி எல்லை தாண்டி தமிழகம் வந்து கொண்டுதானிருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு டெல்டா விசாய பாசனத்திற்காக குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆடிபெருக்கு சிறப்புறும் என்றாலும் கொரானா ஊரங்கால் கொண்டாட்டங்களுக்கு வழியில்லை. காவிரித்தாயை எங்கிருந்து கைகூப்பினாலும் நம்மை வாழவைப்பாள். வணங்குவோம். வழிபடுவோம் வளம் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.