Home ஆன்மிகம் ஆடி மாதப் பிறப்பு! ஆடி முதல் நாளிலேயே ஆடி கிருத்திகை வந்துள்ள அதிர்ஷ்டம் !

ஆடி மாதப் பிறப்பு! ஆடி முதல் நாளிலேயே ஆடி கிருத்திகை வந்துள்ள அதிர்ஷ்டம் !

இன்று ஆடி மாதப் பிறப்பு. தட்சணாயண புண்ணிய கால தொடக்கம். அதோடு மட்டுமல்ல முருனுக்கு உகந்த ஆடி கிருத்திகையும் ஆடி முதல் நாளிலேயே வருகிறது. இப்படி பல இறை அம்சங்கள் ஒரேநாளில் பொறுந்தி வருவதால் இன்று மிக விசேஷமான நாள் ஆகும். மீண்டும் ஆகஸ்ட் 12 – ல் ஆடி 28 – ந்தேதியும் கிருத்திகை நட்சத்திரம் வருகிறது என்பது இவ்வாண்டு ஆடி மாதத்தின் இன்னோரு சிறப்பு ஆகும்.

 

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்! – என்று பாடுவார் திருபுகழ் தந்த அருணகிரிநாதர்.

முருகனுக்கு உகந்த நாட்களில் கிருத்திகை முக்கியமான ஒன்றாகும். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவது சிறந்தது என்றாலும். ஆடி கிருத்திகை அதிக விசேஷமானது ஆகும் . முருகனின் திருநாமங்களில் ஒன்று கார்த்திகேயன் . சிவனின் நெற்றிக்கண்களில் இருந்நு வெளிப்பட்ட தீப்பெறிகளில் ஆறு குழந்தைகளாய் சரவண பெய்கை தாமரை மலர்களில் தோன்றிய முருகவேளை, வளர்த்தெடுக்கும் பெறுப்பை ஏற்றவர்கள் கார்த்திகை பெண்கள் என்பதால் முருகன் கார்த்திகேயன் என்ற திருநாமம் பெற்றான்.

ஈசன் அருளால் 27 நட்சத்திரங்களில் ஒருவராக கார்த்திகையும் இடம் பெறும் பேறு பெற்றனர். அந்த கார்த்திகை அதாவது சொல்வழக்கில் கிருத்திகையில் முருகனை வழிபட்டால் சகல ஐஸ்வரயங்களும் கிட்டும். அதிலும் ஆடி கிருத்திகையில் வழிபட முருகன் கேட்ட வரமெல்லாம் தந்தருவான் என்பது நம்பிக்கை. எனவே தான் ஆடி கிருத்திகை அன்று முருகன் ஆலயங்களில் கூட்டம் அலைமோதும். காவடி எடுத்து வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து முருகப்பெருமனை வணங்குவது வழக்கம்.

அதுவன்றி வீட்டிலும் குளித்து தூய்மையாக விரதமிருந்து நியமங்களை கடைபிடித்து முருகனை படத்திற்கு மலர்கள் சாத்தி, நைவேத்தியங்கள் படையலிட்டு வழிபாடுகள் செய்வதும் மிகுந்த பலனைத் தரும். வீட்டில் விளக்கேற்றி வைத்து காலை மாலை வேளைகளில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் , திருப்புகழ் பாடல்கள் உள்ளிட்ட முருகனுக்கு உகந்த பாடல்களை பாடி வழிபட கவலைகள் அகலும் மனம் அமைதி பெறும் . நோய்நொடிகள் விலகும். தீய வினைகள் அணுகாமல் காப்பு உண்டாகும்.

வறுமை, கடன் தொல்லைகள் நீங்கி குடும்பத்தில் செழிப்பு ஏற்பட்டு சந்தோஷம் பெருகும். சாந்தி நிலவும். முருகன் வழிபட்டால் எதிரிகள் விலகுவார்கள். பகைத்தவர்கள் கூட மனம்மாறி நண்பர்களாவர். எடுத்த காரியங்களில் தடைகள் விலகி ஜெயம் உண்டாகும். தொழில் வியாரங்களில் போட்டி , பொறாமைகள் அகன்று நல்ல லாபம் வந்து சேரும். கிருத்திகையில் விரதமிருத்து மனத்தூய்மையுடன் உளமுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை எல்லாம் வழங்கி வாழவைப்பான் முருகன்.

வந்த வினையும் வருகின்றவல்வினையும்
கந்தனென்று சொல்ல கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீற்று
அணிபவர்க்கு மேவ வராதே வினை.

வந்த, வர இருக்கின்ற தீவினைகள்
கந்தனின் திருப்பெயரைச் சொன்னால்
கலங்கி நம்மை விட்டு விலகும். செந்தூர்வேலவா என்று சொல்லி திருநீறு பூசுவோருக்கு துன்படும் வகையில் எந்த தீவினையும் ஒருபோதும் வராது என்பது திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரின் திருவாக்கு . நாமும் தொழுவோம் வேலவனை நாளும் நலம் பெறுவோம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி

மாவட்ட செய்திகள்

Most Popular

நாளை காலை உருவாகிறது ‘புரெவி’ புயல் !

நாளை காலை புதிய புயல் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காலை காற்றழுத்த...

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த, சந்தோஷ் பாபு ஐஏஸ் யார் ?

தமிழக அரசியல் களத்தில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளையும் தாண்டி, இந்த முறை வேறு சில கட்சிகளும் கவனம் திருப்பி வருகின்றன. கடந்த சில நாட்களாக வேல் யாத்திரை...

‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!

பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இயங்கத் தொடங்கின. உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ரயில்களை இயக்க வேண்டும்...

மூன்று கட்சிகளிடம் சிக்கி விழிபிதுங்கும் ரஜினி!

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தால் தூக்கம் கண்ணில் சொக்குமே அது அந்த காலமே.. மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே.. என்று...
Do NOT follow this link or you will be banned from the site!