ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

 

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

அரிதான ஆடிமாத சனி மஹாபிரதோஷம் இன்று வாய்த்துள்ளது. இந்த பிரதோஷ நாளில் சிவனை வழிபட்டு நம் சங்கடங்களை சரிசெய்து கொள்ளலாம். இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதின் போது அமைவது தான் பிரதோஷ வேளை. தோஷங்கள் அனைத்தும் நீக்கும் வழிபாட்டில் முக்கியமானது பிரதோஷ வழிபாடு.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

தினமுமே பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்வது நல்லது. இயலாதவர்கள் மாதமும் இருமுறை வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்யலாம். திரயோதசி தினமே பிரதோஷ தினமாக அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரதோஷ தினமும் தனித்துவம் வாய்ந்தவை என்றபோதும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அதனால்தான் அதனை மஹா பிரதோஷம் என்று அழைக்கிறோம்.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது சிவபெருமான் விஷம் உண்டு தேவர்களின் துயர்தீர்த்தது ஒரு சனிக்கிழமை திரயோதசி தினத்தன்றுதான் என்கின்றன புராணங்கள். அமிர்தம் வேண்டிக் கடைந்தவர்கள் ஆலகாலம் கண்டு அலறி ஓடினர். அந்த மகாதேவனைத் துதித்தனர். அப்போது மகாதேவன் தோன்றி அவர்களின் துயர்தீர்த்தார். அதேபோன்று நம் வாழ்வில் துன்பங்கள் சூழும் நேரத்தில் அதிலிருந்து விடுபட அந்த சிவபெருமானைத் வணங்க வழிபட வேண்டும்.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

 

மஹா பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் நமது சங்கடங்கள் தீரும். சிவபெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால் லிங்க ரூபமான சிவனுக்கு எவ்வளவு அபிஷேகங்கள் செய்கிறோமோ அவ்வளவு வரங்கள் கிடைக்கும். ஒவ்வொரு அபிஷேகமும் ஒவ்வொரு பலன் இருக்கின்றது . பிரதோஷ அனைத்து தேவர்களும் சிவபெருமான் சந்நிதியில் எழுந்தருளியிருப்பர் என்பது ஐதிகம். எனவே, அந்த வேளையில் சிவன் சந்நிதியில் வைக்கப்படும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் ஒரே நேரத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசித்து வணங்க வேண்டும்.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்தது. சனியின் பார்வையால் நிகழும் கெடுபலன்கள் நீங்க பிரதோஷ வழிபாடு மிகவும் உகந்தது. சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட சனிதோஷங்கள் முற்றிலும் நீங்கும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட சனிபகவான் தன் அருள்பார்வையைக் காட்டியருள்வார்.

பிரதோஷத்தில் 5 வகை உண்டு: நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணியில் 6 மணி வரை ‘நித்தியப் பிரதோஷம்’ என்றும் , வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பட்சப் பிரதோஷம்’ என்றும் தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ என்றும்.
பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவனில் ஒடுங்கி உலக முடிவில் உண்டாகும் காலம் ‘பிரளய பிரதோஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்பார்கள்.
முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்து அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு பதிலகா அப்பிரதட்சண முறையில் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் மீண்டும் நந்தி இடம் திரும்ப திரும்ப சண்டிகேஸ்வரர் சந்நதி வரை செல்ல வேண்டும் . இப்படி மூன்று தடவை செய்வதே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

பிரதோஷ காலத்தில் முறைப்படி சிவபெருமானையும் நந்திதேவரையும் ஒருங்கே தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். அமைதி, ஆனந்தம் வாய்க்கும் முக்தி கிடைக்கும்.

ஆடிமாத சனி மஹாபிரதோஷம்… சங்கடங்கள் தீர்க்கும் பிரதோஷ சிவ வழிபாடு !

பிரதேஷத்தன்று சிவாலயம் செல்லவேண்டும். அங்கு ஈஸ்வரனுக்கும் நந்திதேவருக்கும் ஒரே நேரத்தில் நடைபெறும் அபிஷேகங்களையும் அதனை தொடர்ந்து நடைபெறும் ஆராதனைகளையும் தரிசனம் செய்யவேண்டும். அதன் பிரதேஷ நாயகர் என்றழைக்கப்படும் சந்திரசேகரர் உடன் பார்வதி தேவியும் ரிஷப வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். கோயில் உட் பிரஹாரத்தில் முன்றுமுறை வலம் வரும் பிரதோஷ நாயகருடன் நாமும் வலம் வந்து அதன்பின் நடைபெறும் தீபாராதனைகளை தரிசித்து மனமுருக பிராரத்தனை செய்ய வேண்டும். அப்படி செய்வதால் ஈசனருள் பூரணமாக கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். சிவாய நம. பிரதோஷ காலத்தில் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், பன்னிரு திருமுறைகள், தேவாரம் திருவாசகப்பாடல்கள் பாடி வழிநட ஈசனருள் பூரணமாக கிட்டும். அவனருளாலே ஆனந்தம் பெருகும் நமசிவாய வாழ்க.

-மு.ரா.சுந்தரமூர்த்தி