அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்… ஆடி மாத சிறப்புகள் இதோ!

 

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!

ஆடி மாதம் பிறந்து விட்டது . அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைகட்ட தொடங்கவிடும் . ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் . ஆடிமாதத்தில் சிவன் சக்தியில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம் . தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடக்கிறன .

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!

எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களின் விசேஷமான காலமாக விளங்குகிறது. ஊர் சாட்டுதல் , காப்பு கட்டுதல் , மஞ்சள் ஆடை அணிந்து விரதம் தொடங்குதல் என அம்மன் பக்தர்கள் வழிபாடுகளை தொடங்கி விடுவார்கள் . கரகம் எடுத்தல் , காவடி தூக்குதல் , தீ மிதித்தல் என அம்மன் வழிபாட்டுக்கே உரிய சிறப்பம்சங்கள் நடைபெற தொடங்கி விடும். ஆடியை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர்.

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!
ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். கிராம தேவதைகளில் முக்கியமானது மாரியம்மன் . மழையை பொழிய செய்பவளாகவே மாரியம்மனை மக்கள் கொண்டாடுகிறார்கள் . மாரி என்பது மழை என்பதையே குறிக்கும் . மாதம் மும்மாரி பொழிகிறதா என்பது சொல்வழக்கு .

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!

”நாடு செழிக்க வேணும், நல்ல மழை பெய்ய வேணும். ஊரு செழிக்க வேணும், உலக மக்கள் வாழவேணும்,” என உடுக்கை அடித்து அம்மனிடம் கோரிக்கை வைப்பது வழக்கம் .

மாரியம்மன் மட்டுமின்றி எல்லா அம்மன் கோயில்களிலுமே ஆடித்திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன . கிராம தேவதைகள் மட்டும் இல்லாமல் புராண அம்மன் கோயில்களிலும் ஆடிதிருவிழா கோலாகலம் தான் .
ஆடி வெள்ளி , ஆடி செவ்வாய் , ஆடி கிருத்திகை , ஆடி அமாவாசை , பௌவுர்ணமி, ஆடி பூரம் , ஆடி சுவாதி என ஆடியில் எல்லா நாளுமே விசேஷங்கள் தான் . ஆடியை கற்கடக மாதம் என்பார்கள்.

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!

ஒரு ஆண்டில் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரண்டாக பிரிப்பார்கள் . தட்சணாயணம் புண்ணிய காலம் ஆடியில் தொடங்கி மார்கழியில் நிறைவு பெறும் . உத்ராயண புண்ணியகாலம் தையில் தொடங்கி ஆனியில் நிறைவு பெறும். இது சூரியனின் உதயத்தை வைத்து வகுக்கப்பட்ட ஒன்று .

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!

தட்சணாயண காலத்தில் சூரிய கிழக்கில் சற்றே தென்புறத்தில் உதிக்கும் . உத்ராயண காலத்தில சற்றே வடப்புறத்தில் உதயமாகும் . ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் என்றும் அந்நாட்களில் வேத பாராயணங்கள், மந்திரஜெபங்கள், மாந்த்ரீகம் உச்சடனங்கள் செயவது கூடுதல் பலனை தரும் என்பது முன்னோர்கள் கணிப்பு . ஆடியில் பிராண வாயு , ஜீவ ஆதார சக்தி அதிகம் கிடைக்கும் .

அம்மன் அருளை அள்ளி தரும் ஆடி மாதம்…  ஆடி மாத சிறப்புகள் இதோ!

ஆடி மழைதொடங்கும் காலம் என்பது மட்டுமின்றி உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட தட்சணாயண கால சூரிய கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும் என்பதால் ” ஆடிபபட்டம்.தேடி விதை ” என்று வேளாண்பணிகளை துவங்கினார்கள் . மாரியம்மன் , காளியம்மன் , துர்கையம்மன் , அங்காளம்மன் , எல்லையம்மன் , செல்லியம்மன் , கங்கையம்மன், பொன்னியம்மன் நீலி , சூலி , காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி , சிவகாமி , அபிராமி என எந்த பெயரில் அழைத்தாலும் அது அந்த ஆதிசக்தியான ஆதிபராக்தியையே குறிக்கும் . ஊர் ஊருக்கு ஒரு பெயரில் எழுந்தருளி இருந்தாலும் ஆதி சக்தி ஒன்று தான் என்பதை ஆடி திருவிழாக்கள் உணர்த்துகின்றன. ஆடியில் அம்மன் அருள் தேடிடுவோம் கோடி நன்மைகள் பெற்றிடுவோம் . ஓம் சக்தி .