ஆடி கிருத்திகை – முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து!

 

ஆடி கிருத்திகை – முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து!

ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு இன்று முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை – முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,990 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 61ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 26 பேர் உயிரிழந்த கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 102ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னை. திருச்சி. மதுரை. கோவை. நெல்லையில் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை – முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து!

சென்னை வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோயில், பாடி ,மயிலாப்பூரில் முக்கிய கோயில்களில் அனுமதி ரத்தாகியுள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை ,திருத்தணி முருகன் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உட்பட ஐந்து கோயில்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் அனுமதி ரத்தாகியுள்ளது