‘ஆடி அமாவாசை’.. மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

 

‘ஆடி அமாவாசை’.. மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் துவங்கி விட்டது. இம்மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்தல், பவனி வருதல் என மக்கள் கூட்டம் அலைமோதும். அம்மனுக்கு விழா எடுத்து நடத்துவது என பல கோவில்களில் விசேஷமாக இருக்கும். இந்த ஆடி மாதத்தில் மிக முக்கியமான தினம் ஆடி அமாவாசை. இந்த தினத்தன்று மக்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 20 ஆம் தேதி ( நாளை) வருகிறது.

‘ஆடி அமாவாசை’.. மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அதனால் மக்கள் கூட்டத்தை தவிர்க்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.