திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க ஆதார் அவசியம்!

 

திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க ஆதார் அவசியம்!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோவில்களுக்கு படையெடுத்துவருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க ஆதார் அவசியம்!

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வங்கி பாஸ் புத்தகம் என ஏதாவது ஒன்றை கண்டிப்பாக எடுத்துவந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்படி கொண்டுவராத பக்தர்கள் கோவிலுக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பக்தர்களின் பெயர், முகவரி, ஆதார் விவரங்கள், செல்போன் என ஆகியவற்றை பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, அண்ணாமலையார் தரிசனம் செய்து அம்மன் தரிசனம் செய்து பின்னர் மேற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.