புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர்

 

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர்

ஒடிசாவில் தனது நிலத்தை வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தியில் இளைஞர் ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானாவில் நில பத்திர பதிவுக்கு லஞ்சம் கேட்ட விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தாரை சுரேஷ் என்ற விவசாயி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒடிசாவில் தனது நிலத்தை வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், விரக்தியில் இளைஞர் ஒருவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர்
தீ

ஒடிசா மாநிலம் டைலிமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் கிசான். இவரது நிலத்தை வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ரெங்கலியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளார். ஆனால் வட்டாட்சியர் அலுவலகம் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ராஜீவ் கிசான் மிகவும் விரக்தி அடைந்தார். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழயைன்று ராஜீவ் கிசான் டீசல் நிரப்பட்ட கேன்களுடன் ஆட்டோவில் ரெங்கலியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளி அலுவலகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது, ராஜீவ் கிசான் கேன்களில் இருந்த டீசலை அலுவலகத்தின் உள்ளே ஊற்றினார்.

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… விரக்தியில் தாசில்தார் அலுவலகத்துக்கு தீ வைத்த இளைஞர்
தீயணைப்பு வண்டிகள்

பின் யாரும் சுதாரிப்பதற்குள் அலுவலகத்துக்கு தீ வைத்தார். இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் தீயில் எரிந்து புகைய தொடங்கின.அலுவலகத்தில் தீ பற்றி எரிவதை பார்த்து சுதாரித்த அலுவலகர்கள் தீ அணைக்க போராடினர். செய்தி கேள்விப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த ராஜீவ் கிசானை அலுவலர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் குற்றம் என்பதை மறுக்க யாராலும் முடியாது, அதேசமயம் அரசு அலுவலகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம் என்பதையும் நம்மால் மறுக்க முடியாது.