பிறந்தநாள் சுற்றுலா ரத்து…வீட்டையே விமான நிலையமாக மாற்றிய கனடா பெண்

 

பிறந்தநாள் சுற்றுலா ரத்து…வீட்டையே விமான நிலையமாக மாற்றிய கனடா பெண்

பயணத்தை விரும்பும் எவரிடம் கேட்டால் தெரியும். விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையத்திற்குள் நுழைந்த தருணத்திலிருந்தே விடுமுறை தொடங்கி விடுவதாக சொல்வார்கள்.

பாதுகாப்பு சோதனை தொந்தரவு, இறுதியாக விமானத்தில் ஏற காத்திருக்க வேண்டியது ஆகிய அனைத்து விஷயங்களும் ஒரு சிறந்த விடுமுறையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. மினசோட்டாவில் வசிக்கும் செயிண்ட் பால் என்ற பேஸ்புக் பயனரான டானா நிக்கோல் ஜொன்டால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு சுற்றுலா செல்ல விமானத்தில் பயணிக்க முடியவில்லை. ஆனால் அதை அவர் தன்னால் முடிந்த அளவுக்கு ஈடுகட்டும் காரியத்தைச் செய்துள்ளார்.

அதாவது விமான நிலையம் மற்றும் விமானம் போல தனது வீட்டை மாற்றி அதன் விஷயங்களை தத்ரூபமாக செய்து வீடியோவாக பதிவிட்டுள்ளார். ஜொன்டால் விமான நிலையத்தை அடைவது, தனது பை பொருட்களை சரிபார்ப்பது, பாதுகாப்பு சோதனை செய்வது, காற்று நிரப்பப்பட்ட பொம்மை விமானத்தில் ஏறுவது என்று டானா நிக்கோல் உற்சாகமாக வீடியோவில் நடித்துள்ளார்.