Home இந்தியா கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி... பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி… பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூர் கோவபாடி பகுதியை சேர்ந்தவர் 46 வயதான பீனா ஜிஜூ பால். அவர் பெரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சம்பவத்தன்று வங்கிக்கு பீனா ஜிஜூ பால் தனது வாகனத்தில் சென்றுள்ளார். வங்கியின் உள்ளே சென்ற போது வண்டி சாவியை வண்டியிலேயே வைத்து விட்டு வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.

கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி... பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்

பேங்க் ஆப் பரோடா

வண்டியிலிருந்து சாவி எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் வேகமாக வங்கியிலிருந்து வெளியே வர முயற்சி செய்துள்ளார். அப்போது வங்கியின் கதவு கண்ணாடி என்பதை மறந்து அதன் மீது மோதி கீழே விழந்து விட்டார். அவர் மோதிய வேகத்தில் கண்ணாடி கதவு துண்டு துண்டாக சிதறி கீழே விழுந்தது. அதில் ஒரு கண்ணாடி துண்டு பீனாவின் வயிற்றில் குத்தியது. கீழே விழுந்த பீனா எழுந்து நின்ற போது அவருக்கு காயம் பட்ட இடத்திலிருந்து இரத்தம் வடிய தொடங்கியது.

வங்கியின் கண்ணாடி கதவில் மோதிய பெண்

இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களில், வங்கியில் இருந்தவர்கள் பீனாவை உடனடியாக அருகில் இருந்த பெரும்பாவூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனையில் டாக்டர்கள் போராடியும் பீனாவின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. போலீஸ் அதிகாரி சம்பவம் இடந்த வங்கி கிளையை சென்று பார்வையிட்டார். பெரும்பாவூர் போலீசார் இதனை இயற்கைக்கு மாறான இறப்பாக பதிவு செய்துள்ளனர். பீனா கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருந்தால் அவருக்கு இந்த சோகமான நிகழ்வு ஏற்பட்டு இருக்காது. வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பலியான பீனா கண்ணாடி கதவில் மோதி விபத்துக்குள்ளானது தெளிவாக பதிவாகி உள்ளது.

கேரளாவில் வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதியதில் பெண் பலி... பதற்றம், அவசரத்தால் உயிர் இழந்த பெண்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...
- Advertisment -
TopTamilNews