பொன்மலையில் ஒரு வார காலம் தொடர் மறியல் போராட்டம் – மணியரசன் அறிவிப்பு

பொன்மலையில் ஒரு வார காலம் தொடர் மறியல் போராட்டம் – மணியரசன் அறிவிப்பு

வெளிமாநிலத்தவர்களை அதிகமாக தமிழகத்தில் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தி பேசும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சிக்கும் நிலைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பொன்மலையில் ஒரு வார காலம் தொடர் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது.

பொன்மலையில் ஒரு வார காலம் தொடர் மறியல் போராட்டம் – மணியரசன் அறிவிப்பு

திருச்சியில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பொன்மலையில் ஒரு வார காலம் தொடர் மறியல் போராட்டம் – மணியரசன் அறிவிப்பு

அப்போது அவர், ’’பொன்மலை ரயில்வே பணிமனையில் வெளிமாநிலத்தவர்களை பணியில் அமர்த்தியதை கண்டித்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் ஒரு வாரகாலம் 11.09.2020 முதல் 18.09.2020 வரையிலும் பொன்மலை பணிமனை முன்பாக தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளில் 90 % வேலை வாய்ப்பை தமிழர்களுக்கே

பொன்மலையில் ஒரு வார காலம் தொடர் மறியல் போராட்டம் – மணியரசன் அறிவிப்பு

வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகளில் 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளிமாநிலத்தவரை அப்பணிகளில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழகத்தின் மொழி, இன அடையாளங்களை பாதுகாக்க வேண்டும். இதனை ஹிந்தி பேசும் மாநிலமாக மாற்றும் முயற்சிக்கு, மாநில அரசு துணை போவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழர் உரிமைகளை பாதுகாக்க, அரசியல் கட்சி சார்பற்று போராட முன்வரவேண்டும்’’ என தெரிவித்தார்.