‘100 கார்களில், 15 மாட்டுவண்டிகளில்..’ ஊரார் கண்படும் அளவிற்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்!

‘100 கார்களில், 15 மாட்டுவண்டிகளில்..’ ஊரார் கண்படும் அளவிற்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்!

ஈரோடு அருகே தங்கை மகளுக்கு 100 கார்களில், 15 மாட்டு வண்டிகளில் சீர் கொடுத்து தாய்மாமன் ஒருவர் அசத்தி இருக்கிறார்.

தொன்றுதொட்டு காலத்திலிருந்து தமிழ்வழி மரபில் கடைபிடிக்கப்படுவது தாய்மாமன் சீர். தற்போது நவீன வாழ்க்கைக்கு மக்கள் மாறி இருந்தாலும் பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிபாளையத்தில் மருத்துவர் ராஜா தனது தங்கை மகளுக்கு ஊரே மெச்சிக்கும் வகையில் சீர் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

‘100 கார்களில், 15 மாட்டுவண்டிகளில்..’ ஊரார் கண்படும் அளவிற்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்!

கோபிசெட்டிபாளையத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்திவரும் மருத்துவர் ராஜாவின் தங்கை மோகனப்பிரியா. இவருக்கு ரிதன்யா, மித்ரா ஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் சடங்கு நடத்த திட்டமிட்ட மோகனப்பிரியா, கள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் நடைபெறவிருக்கும் சடங்கு குறித்து தனது அண்ணனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மருத்துவர் ராஜாவிற்கு மோகனப்பிரியா ஒரே தங்கை என கூறப்படுகிறது.

‘100 கார்களில், 15 மாட்டுவண்டிகளில்..’ ஊரார் கண்படும் அளவிற்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்!

இந்த நிலையில், ஊரார் கண் படும் அளவிற்கு தாய்மாமன் சீர் கொடுக்க திட்டமிட்டு ராஜா 100 கார்கள்,15 மாட்டு வண்டிகள் முழுக்க பொருட்களால் நிரப்பி பிரம்மாண்டமாக சீர் கொடுத்துள்ளார். முதல் மாட்டு வண்டியை தானே ஓட்டிக் கொண்டு முன் செல்ல, பின்னால் அவரது உறவினர்கள் குதிரைகளிலும் கார்களிலும் சீர்களைக் கொண்டனர். இதைக் கண்ட ஊர் மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பின்னர், தென்னை ஓலைகளால் அமைந்த குடிசைகளில் அந்த சீர்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன.

‘100 கார்களில், 15 மாட்டுவண்டிகளில்..’ ஊரார் கண்படும் அளவிற்கு சீர் கொடுத்து அசத்திய தாய்மாமன்!

சடங்கு நிகழ்ச்சியில் வந்த அனைவருக்கும் பித்தளை பாத்திரங்களில் உணவு சமைத்து பரிமாறப்பட்டது. காங்கேயம் காளைகளையும், வெள்ளாடுகளையும் ராஜா சீராக கொடுத்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது. தமிழ் பாரம்பரியத்தை மறவாத ராஜா, வருங்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் வகையில் தாய்மாமன் சீர் செய்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.