தேர்தலுக்காக மொத்தம் 702 பறக்கும் படைகள் : தேர்தல் ஆணையம் அதிரடி!

 

தேர்தலுக்காக மொத்தம் 702 பறக்கும் படைகள் : தேர்தல் ஆணையம் அதிரடி!

சட்டமன்றத் தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. வாக்குப் பட்டியல், வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தினத்தன்றே, உடனுக்குடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. விதிகளை மீறும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம், விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறது.

தேர்தலுக்காக மொத்தம் 702 பறக்கும் படைகள் : தேர்தல் ஆணையம் அதிரடி!

இவ்வாறு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் என மொத்தமாக 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் நிலையான குழுக்கள் மற்றும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுக்காக மொத்தம் 702 பறக்கும் படைகள் : தேர்தல் ஆணையம் அதிரடி!

மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 46 வழக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்த சத்யபிரதா சாகு, தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 330 துணை ராணுவ படை கம்பெனிகள் கேட்க உள்ளதாக தகவல் தெரிவித்தார். ஏற்கனவே 45 கம்பெனியினர் தமிழகம் வந்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் மேலும் 15 கம்பெனியினர் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.