ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கோயில்…. இடித்து தள்ளிய அதிகாரிகள்

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கோயில்…. இடித்து தள்ளிய அதிகாரிகள்

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கட்டிய கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் நர்னாவுல் மாவட்டத்தில் கல்தா மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் அந்த பகுதிவாசிகள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று அந்த கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கோயில்…. இடித்து தள்ளிய அதிகாரிகள்
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக நகராட்சி அதிகாரி அபய் யாதவ் கூறியதாவது: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் அந்த பகுதி மக்கள் அண்மையில் கட்டிடத்தை (கோயில்) கட்டினர். அந்த கட்டிடத்துக்குள் முதல்வரின் (மனோகர் லால் கட்டார்) உருவப்படத்தை வைத்து, காலை மற்றும் மாலை வேளைகளில் ஆரத்தி எடுத்து வந்தனர்.

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய நிலத்தில் பா.ஜ.க. முதல்வருக்கு கோயில்…. இடித்து தள்ளிய அதிகாரிகள்
பா.ஜ.க.

அந்த கட்டிடத்துக்குள் இருந்த முதல்வரின் புகைப்படத்தை பறிமுதல் செய்தோம். பின் அந்த கட்டிடத்தை இடித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வினர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் நகராட்சி அதிகாரிகளின் இந்த துணிச்சலான நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.