அமெரிக்க அதிபர் டிரம்பை வழிபட்டு வந்த தெலங்கானா மனிதர் மாரடைப்பால் மரணம்…

 

அமெரிக்க அதிபர் டிரம்பை வழிபட்டு வந்த தெலங்கானா மனிதர் மாரடைப்பால் மரணம்…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை வைத்து வழிபட்டு வந்த தெலங்கானா சேர்ந்த புசா கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார்.

தெலங்கானா மாநிலம் ஜனகனை பகுதியை சேர்ந்தவர் புசா கிருஷ்ணா. அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகர். டிரம்புக்காக உயிரை கொடுக்க அளவுக்கு தீவிர ரசிகரான புசா கிருஷ்ணா தனது வீட்டு அருகில் 6 அடி உயரத்தில் டிரம்ப் சிலையை நிறுவி உள்ளார். மேலும் அந்த சிலைக்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் டிரம்ப் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து பல நாட்களாக வேதனையில் தூக்கிமில்லாமல் தவித்து வந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பை வழிபட்டு வந்த தெலங்கானா மனிதர் மாரடைப்பால் மரணம்…
புசா கிருஷ்ணா

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமையன்று மாரடைப்பு காரணமாக புசா கிருஷ்ணா மரணம் அடைந்தார். இது தொடர்பாக மறைந்த புசா கிருஷ்ணாவின் தாயார் புசா சாவிதிரி கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக எனது மகன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வணங்கி வந்தார். டொனால்ட் டிரம்பை கனவில் கண்டபோதுதான் இது தொடங்கியது. ஜனகனில் டிரம்பின் சிலையை நிறுவினார். சில நாட்களுக்கு முன் டிரம்புக்கு கோவிட்-19 இருப்பது உறுதியான தகவலை புசா அறிந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பை வழிபட்டு வந்த தெலங்கானா மனிதர் மாரடைப்பால் மரணம்…
புசா சாவிதிரி

அந்த செய்தி புசாவை ஆழ்ந்த அதிர்ச்சி ஆழ்த்தியது. பட்டினி கிடந்தார், தூக்கமில்லாமல் இருந்தார், டிரம்ப் குணம் அடைவதற்காக பிரார்த்தனை செய்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணி அளவில் கீழே விழுந்தார். நாங்கள் அவனை உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் மாரடைப்பு காரணமாக புசா இறந்து விட்டதாக மருத்துவர்க்ள தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். டிரம்பை வழிபட்டு வந்த புசா கிருஷ்ணா மறைவு அந்த பகுதி மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.