பீகாரில் வாக்குரிமை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாலையோர டீ விற்பனையாளர்…

பீகாரில் வாக்குரிமை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாலையோர டீ விற்பனையாளர்…

பீகாரில் இந்த மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க உள்ளநிலையில், சாலையோர டீ விற்பனையாளர் ஒருவர் வாக்குரிமை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 28ம் தேதி மற்றும் நவம்பர் 3 மற்றும் 7ம் தேதி என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளன. இந்த சூழ்நிலையில் சாலைகளில் டீ விற்பனை செய்யும் ஒரு டீ விற்பனையாளர், தனது தொழிலையும் செய்து கொண்டு வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.

பீகாரில் வாக்குரிமை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாலையோர டீ விற்பனையாளர்…
அசோக் குமார் ஷனி

பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் அசோக் குமார் ஷனி. அவர் சாலைகளில் டீ விற்பனை செய்து வருகிறார். இந்த மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க உள்ளதால், அவர் வாக்களிப்பு மற்றும் வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கான கோவிட்-19 நெறிமுறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அசோக் குமார் ஷனி அணிந்திருக்கும் வெள்ளை நிற சட்டையில், சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

பீகாரில் வாக்குரிமை தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாலையோர டீ விற்பனையாளர்…
அசோக் குமார் ஷனி

மேலும், மாஸ்க்குக்கு பதிலாக அவர் முகத்தில் அணிந்திருக்கும் துணியில் 2 யார்டு இடைவெளி அவசியம் என எழுதப்பட்டுள்ளது. அசோக் குமார் ஷனி தனது வாடிக்கையாளர்களிடம் வாக்களிக்க செல்லும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார். அசோக குமார் ஷனியின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.