வாழ மற்றும் பணிபுரிவதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடம்.. 5வது இடத்தில் சென்னை

வாழ மற்றும் பணிபுரிவதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடம்.. 5வது இடத்தில் சென்னை

நம் நாட்டில் வாழ மற்றும் பணிபுரிவதற்கு தகுந்த சிறந்த நகரங்கள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தை பிடித்துள்ளது என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண கண்டுபிடிப்பு ஆன்லைன் தளமான ஹோலிடிஃபை டாட் காம், இந்தியாவில் வாழ்வதற்கு மற்றும் பணிபுரியவதற்கு சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதுமாக வாழ்வதற்கும், வேலைப்பார்ப்பதற்கும் சிறந்த 34 நகரங்களை பட்டியலிட்டுள்ளது. ஹைதராபாத் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வாழ மற்றும் பணிபுரிவதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடம்.. 5வது இடத்தில் சென்னை
ஹைதராபாத்

தெலங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத் தென்னிந்தியாவின் நியூயார்க்காக வேகமாக மாறி வருகிறது. ஹைதராபாத்துக்கு செல்லவற்கு செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலம் சிறந்ததாகும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் வாழ்வதற்கும், பணிபுரிவதற்கும் சிறந்த டாப் 5 நகரங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் 2 நகரங்கள் இடம் பிடித்துள்ளது.

வாழ மற்றும் பணிபுரிவதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் ஹைதராபாத் முதலிடம்.. 5வது இடத்தில் சென்னை
சென்னை
  1. ஹைதராபாத் (தெலங்கானா)
  2. மும்பை (மகாராஷ்டிரா)
  3. புனே (மகாராஷ்டிரா)
  4. பெங்களூரு (கர்நாடகம்)
  5. சென்னை (தமிழ்நாடு)