கோவையில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை!

 

கோவையில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக இந்தியாவில இந்தியா மூன்றாவது இடத்துக்கு சென்றுவிட்டது. உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத வேண்டியுள்ளது. இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவையில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை!

இந்நிலையில் கோவை ஆர் எஸ்புரம் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததார். தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டாம் முறை தேர்வெழுத தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக ஆர் எஸ்.புரம் காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.