இன்டெர்நெட் கிடைக்காததால் கூரை மீது ஏறி படித்த மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!

 

இன்டெர்நெட் கிடைக்காததால் கூரை மீது ஏறி படித்த மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்டெர்நெட் கிடைக்காமல் கூரை மீது ஏறி படித்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

இன்டெர்நெட் கிடைக்காததால் கூரை மீது ஏறி படித்த மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!
e-learning concept. Online classes.

கேரளா, மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல்லை சேர்ந்த மாணவி நமிதா பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் அவரது வீடு தாழ்வான இடத்தில் இருப்பதால் இன்டெர்நெட் ஒழுங்காக கிடைக்காத நிலையில், குடும்பத்தினரின் உதவியுடன் வீட்டின் கூரை மீது ஏறி நெட் கிடைக்கிறதா என்று பார்த்துள்ளார். அப்போது அவருக்கு நெட் நன்றாக கிடைத்துள்ளது. அதன் பின்னர் நமிதா கூரை மீது ஏறியே பாடம் கற்று வருகிறார். இதனை அவரது தங்கை நயனா சோஷியல் மீடியாக்களில் பகிர, மிகவும் வைரல் ஆகியுள்ளது.

படிப்பின் மீது நமிதா கொண்டிருக்கும் ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேஹ் சமயம், அவருக்கு தெளிவான இன்டர்நெட் வழங்க மொபைல் இன்டெர்நெட்டுகள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வருகின்றார்களாம்.