‘தொழுவத்திற்குள் புகுந்து மாடுகளிடம் சீறிய சிறுத்தை குட்டி’ – வைரல் வீடியோ!

‘தொழுவத்திற்குள் புகுந்து மாடுகளிடம் சீறிய சிறுத்தை குட்டி’ – வைரல் வீடியோ!

மும்பையில் மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த சிறுத்தை குட்டி, மாடுகளை பயமுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

காடுகள் அழிக்கப்படுவதாலும், உணவு பற்றாக்குறையாலும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வேட்டையாடும் விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

‘தொழுவத்திற்குள் புகுந்து மாடுகளிடம் சீறிய சிறுத்தை குட்டி’ – வைரல் வீடியோ!

இந்த நிலையில், மும்பையின் ஆரே பால் காலணிக்குள் புகுந்த சிறுத்தை குட்டி ஒன்று அங்கிருந்து மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்து அங்கு கட்டப்பட்டிருந்த மாடுகளை பயமுறுத்தியிருக்கிறது. மாடுகள் அலறும் சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் சிறுத்தை குட்டி அங்கிருப்பதை கண்டு பீதியடைந்துள்ளனர். இருப்பினும் சத்தம் போட்டு அதனை விரட்டியடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, அந்த சிறுத்தை கோபமாக மக்களிடம் சீறியுள்ளது.

‘தொழுவத்திற்குள் புகுந்து மாடுகளிடம் சீறிய சிறுத்தை குட்டி’ – வைரல் வீடியோ!

அந்த சிறுத்தை குட்டியின் வீடியோ, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை ஏ.என்.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதிர்ட்ஷவசமாக யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்படவில்லையாம்.