வித்தியாசமாக யோசித்த சாக்லேட் கடைக்காரர்… பெங்களூருவை கலக்கும் பட்டாசு சாக்லேட்…

 

வித்தியாசமாக யோசித்த சாக்லேட் கடைக்காரர்… பெங்களூருவை கலக்கும் பட்டாசு சாக்லேட்…

பெங்களூருவில் ஒரு சாக்லேட் கடையில் விற்பனை செய்யப்படும் பட்டாசு வடிவ சாக்லேட் மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஒளியின் திருவிழாவான தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் சாப்பிடுவதும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பண்டங்களை பரிமாறி கொள்வதும் இயல்பான ஒன்று. இனிப்பு வகைகளில் சாக்லேட்டை குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். தீபாவளி சமயத்தில் சாக்லேட் விற்பனை களைகட்டும். சாக்லேட் தயாரிப்பாளர்கள் விதவிதமான சுவைகளில் அறிமுகம் செய்வார்கள். பெங்களூருவை சேர்ந்த ஒரு சாக்லேட் கடைக்காரர் வித்தியாசமாக பட்டாசு வடிவில் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அது அங்கு மிகவும் பிரபலமாக வருகிறது.

வித்தியாசமாக யோசித்த சாக்லேட் கடைக்காரர்… பெங்களூருவை கலக்கும் பட்டாசு சாக்லேட்…
பட்டாசு சாக்லேட்

பெங்களூருவை சேர்ந்த சாக்லேட் விற்பனையாளர் பிரியா ஜெயின் கூறியதாவது: பல குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்க முடியாது. எனவே பட்டாசு வடிவத்தில் சாக்லேட்டுகளை தயாரிக்க முடிவு செய்தேன். எங்களிடம் ராக்கெட்டுகள், குண்டுகள் மற்றும் புஸ்வான் வடிவத்தில் சாக்லேட்டுகள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் சந்தைகளுக்கு செல்லும்போது மக்கள் மத்தியில் ஒரு பயம் நிலவுகிறது என்ற உண்மை இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களின் ரெஸ்பான்ஸ் அற்புதமானது. ஹோம் டெலிவரி வாய்ப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வித்தியாசமாக யோசித்த சாக்லேட் கடைக்காரர்… பெங்களூருவை கலக்கும் பட்டாசு சாக்லேட்…
சாக்லேட்

வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், நான் இந்த சாக்லேட்டுகளை சாப்பிட்டு பார்த்தேன். அவை மிகவும் சுவையாக இருக்கும். இந்த இனிப்புகள் பலவிதமான சுவைகளை கொண்டவை. எனது நண்பர்கள் அனைவருக்கும் இதை ஆர்டர் செய்துள்ளேன். என் சக ஊழியர்களுக்கும் இதை பரிசாக அளிப்பேன். எல்லோரும் இதை முயற்சிக்க பரிந்துரைக்கிறேன் என்று தெரிவித்தார்.