டெல்லி வரை சென்ற ஆ.ராசா விவகாரம் : தடை போடுமா தேர்தல் ஆணையம்!!

 

டெல்லி வரை சென்ற ஆ.ராசா  விவகாரம் :  தடை போடுமா  தேர்தல் ஆணையம்!!

ஆ.ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. ஆ. ராசா பரப்புரையின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் தாயார் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆ. ராசாவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தது போல திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் கண்டன குரலை பதிவு செய்தனர்.

டெல்லி வரை சென்ற ஆ.ராசா  விவகாரம் :  தடை போடுமா  தேர்தல் ஆணையம்!!

இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு.முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது .என் 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாக பேசவில்லை என தீர்ப்பளிப்பர். இருப்பினும் என் பேச்சால் முதலமைச்சர் கண் கலங்கியதால் மன்னிப்பு கோருகிறேன்” என்றார். இதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லி வரை சென்ற ஆ.ராசா  விவகாரம் :  தடை போடுமா  தேர்தல் ஆணையம்!!

முன்னதாக முதல்வர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சத்யபிரதா சாகு, ஆ.ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அறிக்கை அனுப்பி உள்ளோம்” என்றார்.