ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இன்று விசாரணை!

 

ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இன்று விசாரணை!

திமுகவை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் 30 ஆயிரத்து 984 கோடி இழப்பினை ஏற்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை செய்து வந்தது.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் இந்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் தண்டனையும் அனுபவித்து வந்தனர்.

வழக்கு விசாரணையின் நிறைவில், கடந்த 21.12.2017 அன்று ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஓபி சைனி.
ஆனால் இந்த தீர்ப்பினை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மார்ச்20ம் தேதி சிபிஐ சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இன்று விசாரணை!

டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வரும் இவ்வழக்கில், சிபிஐ கடந்த ஜனவரி 15ம் தேதியே தனது வாத்தினை நிறைவு செய்துவிட்டது. கொரோனா காலத்தினால் இந்த வழக்கின் விசாரணை அதன்பின்னர் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி வரும் நம்பர் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், புதிய அமர்வு இந்த வழக்கை கையில் எடுத்தால் விசாரணை முடிய தாமதமாகு என்பதால், சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர், இது பொதுநலன் சார்ந்த வழக்கு என்பதால், உடனடி விசாரணை தேவை என்று வாதிட்டதை அடுத்து, 2 வழக்கில் உள்ள மேல்முறைட்டு மனு மீது இன்று விசாரணை நடபெற இருக்கிறது.