ஆ. ராசா இனி பரப்புரை செய்ய கூடாது : அதிமுக பரபரப்பு புகார்!!

 

ஆ. ராசா இனி பரப்புரை செய்ய கூடாது : அதிமுக பரபரப்பு புகார்!!

ஆ. ராசா இனி தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கக்கூடாது என அதிமுக வலியுறுத்தியுள்ளது. முதல்வர் குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வரும் ஆ. ராசா பரப்புரை செய்ய தடைவிதிக்க கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

ஆ. ராசா இனி பரப்புரை செய்ய கூடாது : அதிமுக பரபரப்பு புகார்!!

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் ‘முந்தா நாள் வரை வெல்லமண்டியில் வேலை செய்து வந்த எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினுக்கு ஈடாக முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மதிப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அணிந்துள்ள காலனியின் மதிப்பை விட ஒரு ரூபாய் குறைவு என்றும் சரமாரியாக திட்டி தீர்த்தார். இந்த விவகாரம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆ. ராசா இனி பரப்புரை செய்ய கூடாது : அதிமுக பரபரப்பு புகார்!!

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எம்.பி. ஆ.ராசா முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பேசியது தொடர்பாக ஏற்கனவே அளித்த புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் அவர் தேர்தல் பரப்புரையின் போது ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அவர் பேசியது முதல்வர் மற்றும் துணை முதல்வர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண்கள் சமுதாயத்தையும் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. அதனால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். அத்துடன் தேர்தல் பரப்புரையில் இனி ஆ. ராசா பங்கேற்க அனுமதி வழங்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார் என்றார்.