சாகுபடி செய்த கோதுமையை விற்க சென்ற அர்ச்சகர்.. கடவுளின் ஆதார் கார்டு கேட்டு ஷாக் கொடுத்த அதிகாரிகள்

 

சாகுபடி செய்த கோதுமையை விற்க சென்ற அர்ச்சகர்.. கடவுளின் ஆதார் கார்டு கேட்டு ஷாக் கொடுத்த அதிகாரிகள்

உத்தர பிரதேசத்தில் கோயில் நிலத்தில் சாகுபடி செய்த கோதுமையை அரசு மண்டியில் விற்பனை செய்ய சென்ற அர்ச்சகரிடம் அதிகாரிகள் கடவுளின் ஆதார் கார்டு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டம் அட்டாரா வட்டத்தில் குர்ஹாரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராமர் ஜானகி கோயில் உள்ளது. இந்த கோயிலின் அர்ச்சகராகவும், தலைமை பாரமரிப்பாளருமாகவும் பணியாற்றி வருபவர் மஹந்த் ராம்குமார் தாஸ். இவர் கோயிலுக்கு சொந்தமான 7 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

சாகுபடி செய்த கோதுமையை விற்க சென்ற அர்ச்சகர்.. கடவுளின் ஆதார் கார்டு கேட்டு ஷாக் கொடுத்த அதிகாரிகள்
கோதுமை

மஹந்த் ராம்குமார் தாஸ் அண்மையில் கோயில் நிலத்தில் சாகுபடி செய்த 100 குவிண்டால் கோதுமையை அரசு அருகில் உள்ள அரசு மண்டியில் விற்பனை செய்ய விரும்பினார். இதற்காக அருகில் உள்ள நபர்களின் உதவியுடன் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். பின் கோதுமையை மண்டிக்கு அவர் கொண்டு சென்ற போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மண்டியில் இருந்த அதிகாரிகள் கோதுமை சாகுபடி செய்த நிலத்தின் உரிமையாளரின் ஆதார் கார்டு கேட்டுள்ளனர்.

சாகுபடி செய்த கோதுமையை விற்க சென்ற அர்ச்சகர்.. கடவுளின் ஆதார் கார்டு கேட்டு ஷாக் கொடுத்த அதிகாரிகள்
ஆதார் கார்டு மாதிரி

நிலம் கடவுளின் பெயரில் உள்ளதால் அர்ச்சகரால் ஆதார் கார்டு கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட துணை கலெக்டரிடம் அர்ச்சகர் இது தொடர்பாக பேசியுள்ளார். பல ஆண்டுகளாக அரசு மண்டியில் தானியங்களை விற்பனை செய்து வருகிறேன். தற்போது விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று துணை கலெக்டரிடம் அவர் தெரிவித்தார். ஆனால் ஆதார் இல்லாமல் பதிவு செய்ய முடியாது என்று அரசு விதிமுறையை துணைகலெக்டர் அர்ச்சகரிடம் விளக்கம் கொடுத்தார். இதனால் அர்ச்சகர் மஹந்த் ராம்குமார் தாஸ் தனது தானியத்தை முகவர்களிடம் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கடவுளின் ஆதார் கார்டு கேட்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.