பீகாரில் நெருங்கும் தேர்தல்… தொடங்கியது பேனர் யுத்தம்… ஆட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமார் கட்சியினர்

பீகாரில் நெருங்கும் தேர்தல்… தொடங்கியது பேனர் யுத்தம்… ஆட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமார் கட்சியினர்

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் எதிரொலியாக அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. இரு கட்சிகளுக்கு இடையிலான மோதல் தெரு சண்டையாக மாறி வருகிறது.

பீகாரில் நெருங்கும் தேர்தல்… தொடங்கியது பேனர் யுத்தம்… ஆட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமார் கட்சியினர்

ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள் நேற்று தங்களது கட்சியின் 24வது நிறுவன தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமானதாக கூறப்படும் 24 சொத்துக்கள் விவரங்கள் அடங்கிய பேனரை முக்கிய சாலை பகுதியில் வைத்தனர். அந்த பேனரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ராஷ்டிரிய மோசடி தளம் என குறிப்பிட்டு இருந்தது. அந்த போஸ்டரை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்தான் வைத்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

பீகாரில் நெருங்கும் தேர்தல்… தொடங்கியது பேனர் யுத்தம்… ஆட்டத்தை தொடங்கிய நிதிஷ் குமார் கட்சியினர்

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் நீரஜ் குமார் பதிலளிக்கையில், அந்த போஸ்டரை வைத்த நபருக்கு நான் என் இதயத்தலிருந்து நன்றி சொல்கிறேன். அந்த கட்சியின் 24 நிறுவன தினத்தில், சொத்துக்களை பெறுவதற்கு அரசியலை பயன்படுத்திய மக்களால் சேகரிக்கப்பட்ட சொத்துக்களை அந்த போஸ்டர் பட்டியலிடுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் என்பதற்கு பதிலாக ராஷ்டிரிய மோசடி தளம் என குறிப்பிட்டது மிகவும் பொருத்தமானது. அந்த கட்சியின் 24 வருடங்கள் அரசியல் வரலாற்றில் கருப்பு அத்தியாயம். அவர்களின் தலைவர் மட்டும் (லாலு பிரசாத் யாதவ்) ஊழல் வழக்குகளால் சிறைக்கு பின்னால் இருப்பது மட்டுமல்லாமல், அந்த கட்சியும் ஊழல் வாழக்கை, சுவாசத்துக்கு உதாரணம் என தெரிவித்தார்.