உத்தர பிரதேசத்தில் கடவுள் இறந்து விட்டார் என்று கோயில் நிலத்தை ஆட்டைய போட்ட மோசடி நபர்கள்..

 

உத்தர பிரதேசத்தில் கடவுள் இறந்து விட்டார் என்று கோயில் நிலத்தை ஆட்டைய போட்ட மோசடி நபர்கள்..

உத்தர பிரதேசத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் இறந்து விட்டார் என்று தெரிவித்து கோயில் நிலத்தை மோசடி நபர்கள் அபகரித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் லக்னோவின் மோகன்லல்கஞ்ச் பகுதியில் உள்ள கிராமம் குஷ்மவுரா ஹலுவபூர். இந்த கிராமத்தில் ஒரு 100 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ளது. கடவுள் கிருஷ்ணா-ராம் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை இந்த கோயிலை நிர்வாகம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் கயா பிரசாத் என்பவர் கடவுள் கிருஷ்ணா-ராமின் மகன் என்று அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான நில ஆவணங்களில் சேர்க்கப்படுகிறார்.

உத்தர பிரதேசத்தில் கடவுள் இறந்து விட்டார் என்று கோயில் நிலத்தை ஆட்டைய போட்ட மோசடி நபர்கள்..
தினேஷ் சா்மா

இந்த சூழ்நிலையில் 1987ம் ஆண்டு நில ஆவணங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டபோது கிருஷ்ணா-ராம் (கடவுள்) இறந்ததாக அறிவிக்கப்படுகிறார். இதனையடுத்து அந்த அறக்கட்டளையின் சொத்துக்கள் கயா பிரசாத்துக்கு சொந்தமாக மாறுகிறது. 1991ல் கயா பிரசாத் இறந்த விட்டதாக அறிவிக்கப்படுகிறார். இதனையடுத்து கயா பிரசாத்தின் சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்ட ராம்நாத் மற்றும் ஹரித்வாரிடம் அறக்கட்டளை செல்கிறது. 25 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு அந்த கோயிலின் உண்மையான அறங்காவலர் சுஷில் குமார் திரிபாதி, நைப் தாசில்தாரிடம் மோசடி தொடர்பாக புகார் அளித்தபோதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

உத்தர பிரதேசத்தில் கடவுள் இறந்து விட்டார் என்று கோயில் நிலத்தை ஆட்டைய போட்ட மோசடி நபர்கள்..
மோசடி

இந்த விவகாரம் துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்கு தெரியவருகிறது. அவர் இந்த அறக்கட்டளை நில மோசடி விவகாரத்தை விசாரிக்கும்படி, எஸ்.டி.எம். பிரபுல்ல திரிபாதிக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில், உண்மையில் அந்த அறக்கட்டளையை பதிவு செய்த நபரின் பெயரில் யாரோ ஒருவர் போலி ஆவணங்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோயிலின் சுமார் 7,300 சதுர அடி நிலத்தை அபரிக்க இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.