கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கையை ஒரே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது.

பெங்களூருவில் சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்து வருபவர் ரேவண்ணா சித்தப்பா. 79 வயதான ரேவண்ணா சாலையோரத்தில் அமர்ந்து மரக்கன்றுகளை விற்பனை செய்வதை பார்த்த ஒருவர் அவரை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவேற்றம் செய்தார். சாலையோரத்தில் அமர்ந்து ஒற்றை கையில் குடையை பிடித்து கொண்டு இருக்கும் ரேவண்ணாவின் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் ரேவண்ணா அந்த பகுதியில் மிகவும் பிரபலமானார்.

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ
சமூக வலைதளத்தில் வெளியான ரேவண்ணா புகைப்படம்

ரேவண்ணா மரக்கன்றுகளை விற்பனை செய்யும் பகுதியை தேடி சென்று பல நல்ல உள்ளங்கள் உடனடியாக அவருக்கு உதவ தொடங்கின. மேலும் அவரிடம் மரக் கன்றுகளையும் வாங்கி சென்றனர். இந்த எதிர்பாராத உதவிகள் மற்றும் விற்பனை உயர்ந்ததால் ரேவண்ணா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இது தொடர்பாக ரேவண்ணா கூறியதாவது: எனக்கு 74 வயதாகிறது. கனக்புரா சாலையில் சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்து வருகிறேன். சிலர் என்னை கவனித்துள்ளனர்.

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ
ரேவண்ணா

அவர்கள் என்னை புகைப்படம் எடுத்து எல்லா இடத்திலும் வைத்துள்ளனர். அதன் பிறகு மக்களிடமிருந்து அதிகளவில் உதவி கிடைத்தது. மரக்கன்றுகளை வைக்க டேபிள், சேர் மற்றும் குடை கிடைத்தது. முன்பு 5 மரக்கன்றுகள் விற்பனையாகும், தற்போது விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரூ.20 முதல் 30 விலையில் மரக்கன்றை விற்பனை செய்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக மரக்கன்றுகளை விற்பனை செய்து வருகிறேன். யாரிடமும் கடன் வாங்க விரும்பவில்லை. சொந்தமாக சம்பாதிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.