கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…

கேரளாவில் அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தொடர்ந்து தங்கம் கடத்தல் நடைபெற்று வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின தனிச் செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளதால் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், காங்கிரஸ் சார்பில் கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அம்மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…
கேரள முதல்வர் பினராயி விஜயன்

அந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், பினராயி விஜயன் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதால் ஐக்கிய ஜனநாயக முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என தெரியும். ஆனால் பினராயி விஜயன் அரசு கேரள மக்களின் முழு நம்பிக்கையும் இழந்து விட்டது. முதல்வர் தனி செயலாளர் எம்.சிவசங்கர் தங்க கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ளார் என பிரச்சினையை எழுப்பிய போது, நான் நேர்மையான அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறுவதாக கூறினார்.இப்போதும் அதே நிலைப்பாட்டும் அவர் இருக்கிறாரா என்பதை பினராயி விஜயன் தெளிவுப்படுத்த வேண்டும். அரசுக்கு எதிராக நான் எழுப்பிய அனைத்து பிரச்சினைகளும் சரியானவை என்பதை நிரூபித்துள்ளன என தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி…
ரமேஷ் சென்னிதாலா

இதனையடுத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், சட்டப்பேரவையில் அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் அவர்கள் கூறுவது குறித்து அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணயில் ஒற்றுமை இல்லை, அவர்கள் முன்னால் பிரச்சினைகள் உள்ளன. அவை மக்களின் ஆதரவை இழந்து விட்டன. இவை அனைத்தாலும் கலங்குகிறார்கள். இதையெல்லாம் மறைக்க அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள் என தெரிவித்தார். இதனையடுத்து கேரள அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் தீர்மானத்துக்கு 40 பேர் மட்டுமே ஆதரவு அளித்தனர். அதேசமயம் எதிராக 87 வாக்களித்தனர். இதனையடுத்து கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.