உஷாரான கர்நாடக அரசு.. ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமல்

 

உஷாரான கர்நாடக அரசு.. ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெங்களூருவில் இரவு ஊரடங்கை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நகரில் இரவு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.

உஷாரான கர்நாடக அரசு.. ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமல்
கர்நாடக அரசு

பெங்களூருவில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை அமலில் இருக்கும். இரவு ஊரடங்கின்போது, அனைத்து இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், விலக்கு அளிக்கப்பட்டவை செயல்படலாம். ஐ.பி.எஸ். அதிகாரி கமல் பந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 16ம் தேதி நள்ளிரவு வரை விலக்கு அளிக்கப்பட்ட நோக்கங்களை தவிர்த்து, பொது இடத்தில் 4 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

உஷாரான கர்நாடக அரசு.. ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெங்களூருவில் இரவு ஊரடங்கு அமல்
பெங்களூரு

இருப்பினும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்த நிலையங்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், ஐ.பி.சி. பிரிவு 188 மற்றும் கர்நாடக தொற்றுநோய் சட்டம் 2000இன் 4,5 மற்றும் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.