மாஸ்க் கட்டாயம் அணியுங்க….. மாஸ்க் உங்களை கொரோனா வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கும்… அடிச்சு சொல்லும் பல்கலைகழக ஆய்வு

மாஸ்க் கட்டாயம் அணியுங்க….. மாஸ்க் உங்களை கொரோனா வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கும்… அடிச்சு சொல்லும் பல்கலைகழக ஆய்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்தியா உள்பட பல நாடுகள் மாஸ்க் (முககவசம்) அணிவதை கட்டாயமாக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் வட கரோலினா பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வவின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், மனிதனுக்கு முதலில் எப்படி கொரோனா வைரஸ் தொற்றுகிறது, அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாஸ்க் கட்டாயம் அணியுங்க….. மாஸ்க் உங்களை கொரோனா வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கும்… அடிச்சு சொல்லும் பல்கலைகழக ஆய்வு

வட கரோலினா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின்படி, மூக்கில் உள்ள செல்களை இந்த வைரஸ் எளிதாக பாதிக்கிறது. வைரஸ் முதலில் நாசி குழியில்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாசி துவாரங்களில் உள்ள செல்களில் அதிகளவில் ACE2 புரோட்டீன் உள்ளது, இந்த குறிப்பிட்ட புரோட்டீன், செல்களை வைரஸ் பாதிக்க அனுமதிக்கிறது. ஆனால் தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் வரிசையாக இருக்கும் செல்கள் மற்றும் நுரையீரல் செல்களில் இதன் பிரதிபலிப்பு குறைவாக உள்ளது.

மாஸ்க் கட்டாயம் அணியுங்க….. மாஸ்க் உங்களை கொரோனா வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கும்… அடிச்சு சொல்லும் பல்கலைகழக ஆய்வு

அதாவது கீழ் சுவாச பாதையில் குறைவாகவே பிரதிபலிக்கிறது. அதேசமயம் நுரையீரலால் வைரஸ் உறிஞ்சப்படுவதால் ஆபத்தான நிமோனியா போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் மாஸக் அணிந்தால் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என என அந்த ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் பவுச்சர் பல்கலைக்கழக செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார். அதில் அவர், நுரையீரல் தொற்று விதைக்கப்பட மூக்கு ஆரம்ப தளமாக இருந்தால்,நாசி துவாரங்களை பாதுகாக்க மாஸ்க் பயன்படுத்தலாம். அத்துடன் வைரஸ் எதிர்ப்பு நாசி ஸ்ப்ரேக்கள் பலனளிக்கும் என தெரிவித்துள்ளார்.