சட்டமன்றத்தில் இன்றே சொல்லுங்க … தேர்தல் வாக்குறுதியால் ஸ்டாலினுக்கு நெருக்கடி!

 

சட்டமன்றத்தில் இன்றே சொல்லுங்க … தேர்தல் வாக்குறுதியால் ஸ்டாலினுக்கு நெருக்கடி!

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. பெண்கள், திருநங்கைகள் ,மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ. 4000, அத்துடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்களின் அடிப்படையில் அதற்கான தீர்வு என பல அதிரடி நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

சட்டமன்றத்தில் இன்றே சொல்லுங்க … தேர்தல் வாக்குறுதியால் ஸ்டாலினுக்கு நெருக்கடி!

அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு புதிதாக கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மாவட்ட போராட்டக்குழு சார்பில் அரசு தலைமை கொறடா கோவி செழியனிடம் இது குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை ஒன்று சேர்த்து கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என மு. க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எனவே முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ள நிலையில் கும்பகோணம் மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கும்பகோணம் மாவட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் இன்றே சொல்லுங்க … தேர்தல் வாக்குறுதியால் ஸ்டாலினுக்கு நெருக்கடி!

ஏற்கனவே தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது தென்காசி, கள்ளக்குறிச்சி ,திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ,மயிலாடுதுறை ஆகியவை தனியாகப் பிரிக்கப்பட்டு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.