உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

 

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது . அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என்றும் கூறியது.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 2ம் தேதி முதல் 3ம் தேதி வரை குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத் தீவு பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.