வறுமையால் வேறு பெற்றோருக்கு கொடுத்த தன் குழந்தையை மீட்டுத் தாருங்கள்.. தாய் நீதிமன்றத்தில் மனு

 

வறுமையால் வேறு பெற்றோருக்கு கொடுத்த தன் குழந்தையை மீட்டுத் தாருங்கள்.. தாய் நீதிமன்றத்தில் மனு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே தனது குடும்பம் வறுமையில் வாடியதால், குழந்தை இல்லாமல் தவித்து வந்த ஒரு பெற்றோரிடம் 40 நாட்களே ஆன குழந்தையை அம்பிகா கொடுத்துள்ளார். இந்த நிலையில் அம்பிகா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

வறுமையால் வேறு பெற்றோருக்கு கொடுத்த தன் குழந்தையை மீட்டுத் தாருங்கள்.. தாய் நீதிமன்றத்தில் மனு

அந்த மனுவில், தனக்கு பிறந்த ஆண்குழந்தையை வறுமையால் விருதுநகர் மாவட்டம், மூளிப்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் – கோமதி தம்பதிக்கு கொடுத்து விட்டதாகவும் அவர்கள் குழந்தைக்கு பிறந்த சான்றிதழ் பெறுவதற்கு என்னை தொடர்பு கொள்ள முடியாததால், டிசம்பர் மாதம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் குழந்தையை ஒப்படைத்து விட்டதாகவும் அதனால் தன் குழந்தையை மீட்டு தன்னிடம் கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் அதன் முடிவுகள் வர 2 மாத காலம் ஆகும் என்பதால் அதன் முடிவை பொறுத்து குழந்தையை ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், டி.என்.ஏ பரிசோதனை முடிவை பொறுத்து குழந்தை ஒப்படைக்கலாம் என்று தீர்பளித்துள்ளனர்.