மலிவான விளம்பரத்திலும் ஒரு மார்பிங் – திமுகவுக்கு ஆள்பிடிப்பதா ? அசிங்கப்படுத்துவதா ?

 

மலிவான விளம்பரத்திலும் ஒரு மார்பிங் – திமுகவுக்கு ஆள்பிடிப்பதா ? அசிங்கப்படுத்துவதா ?

பத்திரிகை செய்திகளில் அதிக கவனம் பெறுபவை ”காணவில்லை” செய்திகள். மக்கள் மனதில் இருக்கும் பொதுவான இரக்க உணர்வு காரணமாக ”காணவில்லை” விளம்பரங்கள் கவனம்பெறுகின்றன. உண்மையிலேயே அதன் மூலம் பலர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் சேர்க்கப்படுகிறார்கள்.

ஏதோ ஒரு மனச் சிக்கல், மனப்பிறழ்வு அல்லது காணாமல் ஆக்கப்படுபவர்கள் குறித்து வெளியிடும் விளம்பரங்களில் உறவுகளில் எண்ணங்கள் வெளிப்படும். யாரோ ஒருவர், எங்கிருந்தோ தாய், மகள், தகப்பன் என, உணர்வு ரீதியாக அந்த விளம்பரங்களை பார்க்கும்போது, காணாமல் போனவர்கள் குறித்து கவனம் பெற்று தேடுவதற்கு முனைப்பு காட்டுவார்கள்.

மலிவான விளம்பரத்திலும் ஒரு மார்பிங் – திமுகவுக்கு ஆள்பிடிப்பதா ? அசிங்கப்படுத்துவதா ?

அப்படி ஒரு உணர்வு ரீதியான விஷயத்தை கையில் எடுத்து விளம்பரம் செய்துள்ளது மும்பை தானே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை.

தங்களது மகளை காணவில்லை என தொடங்கும் அந்த விளம்பரம், ’உனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம் என்றும், உனக்கு பிடித்த வேலைக்கு நீ போகலாம்’ என குறிப்பிடுகிறது. அடுத்ததாக சொல்வதுதான் அது விளம்பரம் என வெளிப்படையாக தெரிகிறது. ’நீ விரும்பியபடி அலுவலகத்துக்கு குர்தா ஆடைகளை அணிந்து செல்லலாம் ’என்றும் ’அந்த குர்தாக்களை ”தானே” வில் சிறந்த குர்தாக்களை விற்கும் நிறுவனத்தில் வாங்கலாம்’ என்றும் சொல்கிறார்கள். ’உன் தோழிகளுக்கு அந்த கடையிலேயே குர்தா வாங்க முடிவு செய்துள்ளோம்’ என்றும் தொலைபேசி எண்ணுடன் தெரிவித்துள்ளனர்.

மலிவான விளம்பரத்திலும் ஒரு மார்பிங் – திமுகவுக்கு ஆள்பிடிப்பதா ? அசிங்கப்படுத்துவதா ?

மக்களின் அதிகபட்ச கருணை உணர்ச்சியை தூண்டும் ஒரு விஷயத்தை இந்த விளம்பரம் மலிவாக கையாள்கிறது என பலரும் நினைக்கலாம். உண்மைதான், ஆனால் அதைவிடவும் இந்த விளம்பரத்தைப் போலவே மலிவாக வேறொரு வேலையை செய்துள்ளனர் சிலர்.

மலிவான விளம்பரத்திலும் ஒரு மார்பிங் – திமுகவுக்கு ஆள்பிடிப்பதா ? அசிங்கப்படுத்துவதா ?

திமுகவை கிண்டல் செய்கிறேன் என இந்த விளம்பரத்தை வைத்து, ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் போலி விளம்பரம் வெளியிட்டுள்ளனர். ’நீ விரும்பிய வேலைக்கு போகலாம் என்றும், நீ விரும்பியபடி திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் குடும்பத்தினர் இணைகிறோம்’ என்றும், அக்காவின் கணவர், அண்ணன் மனைவி ( அத்திம்பேர், மன்னி ) ஆகியோரும் இணைகிறோம் என்றும் கூறியுள்ளனர். பார்த்தசாரதி, எக்ஸ் சங்கி என்றும் முகவரி அளித்துள்ளனர்.

போலியாக மார்பிங் செய்யப்பட்ட இந்த புகைப்படத்தை வெளியிட்டவர்களின் நோக்கம் திமுகவுக்கு ஆள்பிடிப்பதா ? திமுகவை அசிங்கப்படுத்துவதா என தெரியவில்லை. என்றாலும், இது போன்ற போலிகளை இணையவெளியில் உண்மை என நம்பாமல் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.

-தமிழ் தீபன்