ஒரு மாதத்திற்குப் பின் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு!

 

ஒரு மாதத்திற்குப் பின் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு!

27 மாவட்டங்களில் மட்டும் ஒரு மாதத்திற்குப் பின் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்குப் பின் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 21ஆம் தேதி வரை மேலும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு. அதே சமயம் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சலூன்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குப் பின் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு!

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மட்டும் ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அத்துடன் மதுக்கடைகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடை திறப்பின் போது பணியாளர்கள் , மதுபான கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி அமைக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மது வாங்க வந்தவர்களுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக்கூடாது . வரிசையில் நிற்கும்போது இரு நபர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். மது விற்பனையை கட்டாயம் மாலை 5 மணிக்கு முடித்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது