இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு.. ஓட ஒட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட தொழிலாளி…

இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு.. ஓட ஒட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட தொழிலாளி…

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவது தொடர்பான தகராறில் தொழிலாளி வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு.. ஓட ஒட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட தொழிலாளி…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி காந்திநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பார்த்திபன் (44). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகள் உட்பட 3 குழதைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற பார்த்திபனுக்கு, எதிரே மற்றொரு வாகனத்தில் வந்த அதேபகுதியை சேர்ந்த பால் வியாபாரி அனுமுத்துவுடன் வாகனத்திற்கு வழிவிடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து இருதரப்பினருடன் நாளை கிராமத்தினர் பஞ்சாயத்து நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு.. ஓட ஒட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட தொழிலாளி…

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பார்த்திபன், தனது வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை அருகேயுள்ள சர்க்கரைகுப்பம் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். ஊருக்கு வெளியே உள்ள செங்கல்சூளை அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கும்பல் பார்த்திபனை வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றபோது, துரத்திச் சென்று வெட்டிய மர்மநபர்கள், சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் தலையின் மீது கல்லைப் போட்டு கொன்றுவிட்டு தப்பியோடியது.

இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு.. ஓட ஒட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட தொழிலாளி…

கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் மனைவி ஜோதி புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.