கந்துவட்டி கொடுமை; வட்டி கணக்குகளை எழுதிவைத்துவிட்டு 2 பேர் தற்கொலை

நாகையில் வட்டி கணக்குகளை எழுதிவைத்துவிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகையில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் கத்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(32). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் முருகேசன்(28). இவர்கள் இரண்டு பேரும் நாகை அருகே திருமருகல் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக்கில் சுமார் ரூபாய் 8 லட்சத்திற்கான கணக்கு இல்லாததால், சிலரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்துள்ளனர். தொடர்ந்து கணக்கில் வராத தொகையை இருவரும் ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் ஜூன் மாதம் தருவதாக கூறி எழுதி கொடுத்து பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2ம் தேதி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து இருந்த முருகேசன் மொத்த தொகையும் தான் கொடுக்க வேண்டும் அச்சத்திலும், ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பின்புறம் உள்ள ஜெனரேட்டர் ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரது உறவினர்களும் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள திட்டச்சேரி போலீசார், இறந்துபோன ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரும் பணி செய்யும் இடத்தில் உரிமையாளர் மற்றும் கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Most Popular

மருத்துவ படிப்பு ஒ.பி.சி இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வழங்க தமிழக அரசு வழக்கு! – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மருத்துவ மேல்நிலைப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை...

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது...

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சட்டபேரவை...

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

கொரொனா தாக்குதல் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. பெங்களூருவில் ஹாக்கி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். இப்போது பேட்மின்டன் பிரிவிலும் ஒருவருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!