‘சிகிச்சை தொடங்க தாமதம்’…தாயின் உடல்நிலை மோசமாகி வருவதாக ட்விட்டரில் வேதனை தெரிவிக்கும் நபர்!

 

‘சிகிச்சை தொடங்க தாமதம்’…தாயின் உடல்நிலை மோசமாகி வருவதாக ட்விட்டரில் வேதனை தெரிவிக்கும் நபர்!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பாதிக்கப்பட்ட எல்லாரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘சிகிச்சை தொடங்க தாமதம்’…தாயின் உடல்நிலை மோசமாகி வருவதாக ட்விட்டரில் வேதனை தெரிவிக்கும் நபர்!

பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதே போல மருத்துவமனை குறித்த தகவல்களை அளிக்க இணையதள சேவையையும் தொடக்கி உள்ளது. இந்த நிலையில் சென்னை மருத்துவமனையில் கொரோனா முடிவு வராமல், சிகிச்சை தொடங்கவில்லை என்றும் தனது தாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், சென்னை அரசு மருத்துவமனையில் தனது தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வராததால், இன்னும் சிகிச்சை தொடங்கவில்லை என்பதால் தாயார் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.